வன்னிப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு, பொது மக்களோடு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து, கருத்துக்களை வழங்கினார்

பதிவு:2023-10-03 22:58:59



வன்னிப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு, பொது மக்களோடு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து, கருத்துக்களை வழங்கினார்

வன்னிப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு, பொது மக்களோடு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து, கருத்துக்களை வழங்கினார்

திருவள்ளூர் அக் 03 : காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், வன்னிப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொது மக்களோடு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து, கருத்துக்களை வழங்கி பேசினார்.

நீங்கள் தெரிவித்ததில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரச்சினைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சில பிரச்சினைகளுக்கு காலம் எடுத்து தீர்வு காணக்கூடியதாக உள்ளது. ஆக நீங்கள் தெரிவித்த அனைத்து பிரச்சனைகளுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக சிறப்புரையாற்றியதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். அதன் மூலம், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இந்த அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக எவ்வளவு திட்டங்களை இதுவரையில் வழங்கியுள்ளது என்பதை காணொளி வாயிலாக அறிந்திருப்பீர்கள். இன்று தமிழ்நாட்டில் ஒரு கோடியே 6 லட்சத்து 50,000 பயனாளிகளுக்கு மாதமாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கே செலுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தில் யாரேனும் பெயர் விடுபட்டிருந்தால் அதற்கு எவ்வாறு மீண்டும் விண்ணப்பிப்பது என்பதற்கு அருகிலுள்ள இ சேவை மையத்தின் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த கிராம சபை கூட்டத்திற்கு இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்வதற்காக தான் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலரும் இங்கு வந்துள்ளோம். ஆக இங்கு நீங்கள் தெரிவித்துள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்.

முன்னதாக கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்புரை காணொளி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக தயாரிக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டது அக்காணொளிகளை மாவட்ட ஆட்சியர் பொது மக்களோடு சேர்ந்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொது மக்களோடு கலந்துரையாடி, மனுக்களை பெற்றுக்கொண்டு அம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கிரமசபை கூட்டத்தில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், உதவி இயக்குநர் ஊராட்சிகள் ரூபேஷ், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜி.ரவி, வன்னிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பி.மஞ்சுளா, உள்ளாட்சி பிரதிநிதிகள்,பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.