பதிவு:2022-05-10 23:08:26
திருத்தணி தொகுதி அமமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துவிட்டு முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பி வி ரமணா தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்
திருவள்ளூர் மே 10 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி அமமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துவிட்டு தாய் கழகமான அதிமுகவில் இணைத்துக்கொள்ள முடிவு செய்தனர் அதன்படி திருத்தணி நகராட்சி செயலாளரும் முன்னாள் நகரமன்ற தலைவருமான சௌந்தரராஜன் தலைமையில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பி வி ரமணா முன்னிலையில் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.திருத்தணி நகர செயலாளர் சௌந்தர்ராஜன் முன்னிலையில் இணைந்தவர்களுக்கு அதிமுக துண்டு அணிவித்து வரவேற்றனர்.
அதேபோல் திருவள்ளூர் நகரத்திற்கு உட்பட்ட திமுக பிரமுகர் சேகர், சி.பி.சதீஷ்குமார் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரும் மாவட்ட செயலாளருக்கு சால்வை அணிவித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எழிலரசன், மாவட்ட பொருளாளர் ஜெ. பாண்டுரங்கன், திருத்தணி ஒன்றிய செயலாளர் இ.என் கண்டிகை இரவி, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் ட்டி.டி சீனிவாசன், பேரூராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் நிர்வாகிகள் தாமு சகாதேவன், சங்கர் மற்றும் கோட்டீஸ்வரன் வெங்கடேசன் , உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பி வீரமணி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது பேசிய மாவட்ட செயலாளர் மாவட்ட செயலாளர் ரமணா வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அதிமுகவில் உண்மையாக உழைக்கும் உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் தலைமை உத்தரவின் பேரில் பொறுப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.