பதிவு:2023-10-03 23:02:37
திருவள்ளூரில் மகாத்மா காந்தியடிகளின் 155 வது பிறந்த தினத்தை முன்னிட்டு காதி தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் அக் 03 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் 155 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் (காதி கிராப்ட்) சார்பாக அமைக்கப்பட்ட விற்பனை அங்காடியில் காதி தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்கினார்.
முன்னதாக மகாத்மா காந்தியடிகளின் 155 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் (காதி கிராப்ட்) சார்பாக அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இதில் மாவட்ட குடிசைத் தொழில் ஆய்வாளர் ரங்கநாதன்,தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.