பதிவு:2023-10-10 23:17:38
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கே.ஜி மழலையர்களுக்கான பாரத சாரண சாரணியர் பிரிவு
திருவள்ளூர் அக் 10 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறுவயது முதல், கல்வியிலும், ஒழுக்கத்திலும், நாட்டு நலனிலும் சமூக அக்கறை கொண்ட நல்ல குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் கே.ஜி மழலையர்களுக்கான பாரத சாரண சாரணியர் பிரிவு தொடங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக பாரத சாரதா சாரணியர் இயக்க மாவட்ட செயலர் டாக்டர்.சாம்சன் இளங்கோவன் கலந்து கொண்டு மழலையர்களுக்கான பாரத சாரண சாரணியர் பிரிவினைத் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் டாக்டர். ஸ்டெல்லா ஜோசப் தலைமை தாங்கி பேசுகையில், இந்த குழந்தைகள் வருங்காலத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தலைமை பதவி வகித்து, இவர்களின் கீழ் பணியாற்றும் அனைவரையும் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் சமூக அக்கறை உடைய பணியாளர்களை உருவாக்குவார்கள் என்று எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்த சிறு வயதிலேயே சமூக அக்கறை உடைய மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக, கே.ஜி. மழலையர்களுக்கான பாரத சாரண சாரணியர் இயக்கத்தை நமது பள்ளியில் தொடங்க வேண்டும் என்று பள்ளி தாளாளர் விஷ்ணு சரண், பள்ளி இயக்குநர் பரணிதரன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
இதில் ஒருங்கிணைப்பாளர் செல்வி. சரண்யா,துணை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியர்கள் டாக்டர்.ஷாலினி சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.