பதிவு:2023-10-10 23:18:57
வியாசபுரம் ஊராட்சியை சேர்ந்த திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா பங்கேற்பு
திருவள்ளூர் அக் 10 : அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்டங்களிளில் இருந்து ஏராளமானோர் விலகி அதிமுக வில் தங்களை இணைத்து வருகின்றனர். அதன்படி திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவாலங்காடு ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஏற்பாட்டில் வியாசபுரம் ஊராட்சியை சேர்ந்த திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் அதிமுகவில் இணைந்த இளைஞர்கள், பெண்களுக்கு சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் அதிமுக வெற்றிக்காக பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி. ரமணா கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாலாஜி, கந்தசாமி, சூரகாபுரம் சுதாகர், சிற்றம் சீனிவாசன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.