முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ராவணன் போல் சித்தரித்து புகைப்படங்கள் வெளியிட்ட பாஜக வை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பதிவு:2023-10-10 23:20:09

திருவள்ளூர் அக் 10 : முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ராவணன் போல் சித்தரித்து புகைப்படம் பாஜக சார்பில் சமூக வளைதலங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த போட்டோ தற்போது வைரலானதையடுத்து பாஜகவை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் எல்ஐசி எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவரும், பொன்னேரி எம்எல்ஏ.வுமான துரை சந்திரசேகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வழக்கறிஞர் வி.இ.ஜான் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய பாஜக அரசு வேண்டுமென்றே இளம் காங்கிரஸ் ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து சமூக வளைதளங்களில் பதிவிட்டதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், சி.பி.மோகன்தாஸ், ஜே.கே.வெங்கடேஷ், தளபதி மூர்த்தி, சம்பத், அருள், வடிவேலு, சரஸ்வதி, ஜே.டி.அருள், வி.எஸ்.ரகுராமன், ஜி.எம்.பழனி, தாஸ், திவாகரன், முகுந்தன், எம்.ஜே.ராமன், கோடீஸ்வரன், உதயசங்கர், பார்த்தசாரதி, பி.செல்வகுமார், இளங்கோ, எஸ்.செல்வகுமார், சதீஷ், வி.எம்.தாஸ், பாடலீஸ்வரன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.