பதிவு:2023-10-28 21:31:21
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதியில் 33 லட்சத்து 34 ஆயிரத்து 786 வாக்காளர்கள் : வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் வெளியிட்டார் :
திருவள்ளூர் அக் 28 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.அதன்படி கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தமுள்ள 330 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 130838, பெண் வாக்காளர்கள் 137209, பிற பாலினத்தவர் 41 ஆக மொத்தம் 268088 வாக்காளர்கள் உள்ளனர்.பொன்னேரி தொகுதியில் மொத்தமுள்ள 311 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 123627, பெண் வாக்காளர்கள் 129120, பிற பாலினத்தவர் 27 ஆக மொத்தம் 252774 வாக்காளர்கள் உள்ளனர்.
திருத்தணி தொகுதியில் மொத்தமுள்ள 330 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 132067, பெண் வாக்காளர்கள் 135775, பிற பாலினத்தவர் 30 ஆக மொத்தம் 267872 வாக்காளர்கள் உள்ளனர்.திருவள்ளூர் தொகுதியில் மொத்த முள்ள 296 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 125937, பெண் வாக்காளர்கள் 131851, பிற பாலினத்தவர் 23 ஆக மொத்தம் 257811 வாக்காளர்கள் உள்ளனர்.பூந்தமல்லி தொகுதியில் மொத்தமுள்ள 390 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 177546, பெண் வாக்காளர்கள் 184628, பிற பாலினத்தவர் 69 ஆக மொத்தம் 362243 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆவடி தொகுதியில் மொத்தமுள்ள 440 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 213428, பெண் வாக்காளர்கள் 218386, பிற பாலினத்தவர் 94 ஆக மொத்தம் 431908 வாக்காளர்கள் உள்ளனர்.மதுரவாயல் தொகுதியில் மொத்தமுள்ள 440 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 209820, பெண் வாக்காளர்கள் 207218, பிற பாலினத்தவர் 119 ஆக மொத்தம் 417157 வாக்காளர்கள் உள்ளனர்.அம்பத்தூர் தொகுதியில் மொத்தமுள்ள 350 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 175598, பெண் வாக்காளர்கள் 176187, பிற பாலினத்தவர் 78 ஆக மொத்தம் 351863 வாக்காளர்கள் உள்ளனர்.
மாதவரம் தொகுதியில் மொத்தமுள்ள 467 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 224767, பெண் வாக்காளர்கள் 227692, பிற பாலினத்தவர் 109 ஆக மொத்தம் 452568 வாக்காளர்கள் உள்ளனர். திருவொற்றியூர் தொகுதியில் மொத்தமுள்ள 311 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 134315, பெண் வாக்காளர்கள் 138057, பிற பாலினத்தவர் 130 ஆக மொத்தம் 272502 வாக்காளர்கள் உள்ளனர். ஆக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3665 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 16 லட்சத்து 47 ஆயிரத்து 943 பேரும், பெண் வாக்காளர்கள் 16 லட்சத்து 26 ஆயிரத்து 123 பேரும் மாற்று பாலினத்தவர்கள் 720 பேரும் என் மொத்தம் 33 லட்சத்து 34 ஆயிரத்து 786 பேர் உள்ளனர்.
மேலும் 1.1.2024 ஆம் தேதி அன்று 18 வயதை பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்துப் பிழைகள் முகவரி மாற்றம் மற்றும் தொகுதி மாற்றம் ஆகியவற்றிற்கு படிவம் 8-ம் தங்களது குடியிருப்புக்கு அருகில் உள்ள நியமிக்கப்பட்டுள்ள இடங்கள் அண்ணா வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் அனைத்து வேலை நாட்களிலும் மற்றும் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் ஆன 4. 11.23, 5.11.23,18.11.23,19.11.23 இனிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கடிதங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் http://voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் அதிகாரியும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வ.மாலதி, வட்டாட்சியர்கள் சோமசுந்தரம் (தேர்தல்), அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.