பதிவு:2023-10-30 21:47:24
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி உறுப்பினர்கள் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் : முன்னாள் அமைச்சர் பி. வி. ரமணா பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார் :
திருவள்ளூர் அக் 30 : திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணவாளநகரில் பூத் கமிட்டி முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா, முன்னாள் எம்.பியும், மாநில மாணவரணி செயலாளருமான ஆர்.எஸ்.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும், அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், அதிமுக உண்மைத் தொண்டன், கட்சிக்காக உழைப்பவர்கள் என 19 பேரை நியமனம் செய்ய வேண்டும் என அறிவித்தபடி பகுதி செயலாளர்கள், கிளை செயலாளர்கள் நியமனம் செய்துள்ளார்களா போன்ற விவரங்களை முழுமையாக பரிசீலனை செய்தனர்.
மேலும் ஒரே குடும்பத்தில் யாராவது நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்து தலைமைக் கழகம் அறிவித்ததை சுட்டிக்காட்டி பணி செய்யக்கூடிய தகுதியான நபர்களை நியமனம் செய்யவும் வலியுறுத்தினர். இதில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூராகபுரம் சுதாகர், மாவட்ட அவைத் தலைவர் இன்பநாதன், நிர்வாகிகள் ஞானகுமார், கோட்டீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதே போல் திருவள்ளூர் ஒன்றியம் சேலை ஊராட்சியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கோவர்த்தனன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.