திருவள்ளூர் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் மீது வழக்கு : ஒருவன் கைது : சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் சேர்ப்பு : தலைமறைவான இளைஞருக்கு போலீஸ் வலை

பதிவு:2023-11-08 23:32:44

திருவள்ளூர் நவ 08 : திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் கசவநல்லாத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஒருவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துனர். 14 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தகவல்தூரில் வசித்து வரும் 15 வயது சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஆரா என்ற இளைஞர் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வந்து அவரது தந்தையிடம் பேசிவிட்டு செல்வது வழக்கம்.

நிலையில் கடந்த 20. 1.2022 அன்று சிறுமியின் தந்தை வீட்டில் இல்லாத போது வந்த ஆரா சிறுமியிடம் காதலிப்பதாகவும் திருமணம் செய்வதில் கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் தகாத உறவில் இடம் பெற்றுள்ளார்.

அந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பலமுறை உறவு வைத்துக் கொண்ட ஆரா அதன் பிறகு பேசவில்லை என்று கூறப்படுகிறது.பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் 15 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுப்பு என்கிற சுகுவனேஸ்வரன்(22) இந்த இளைஞரும் கடந்த 20. 10. 2023 அன்று கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 3.11.2023 அன்று திறமைக்கு மயக்கம் ஏற்படவே வீட்டின் அருகில் இருந்தவர்கள் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமி திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரா என்ற இளைஞரை கைது செய்த போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.14 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.மேலும் தலை மேலாக உள்ள சுகு என்கிற சுகுவனேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.