மணவூர் ரயில் நிலையம் அருகில் பல்பொருள் அங்காடி கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பருப்பு எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் கொள்ளை

பதிவு:2023-11-08 23:34:23

திருவள்ளூர் நவ 08 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த மணவூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் (56).இவர் மணவூர் ரயில் நிலையம் அருகே பல்பொருள் அங்காடி கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் 9.30 மணி அளவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ 5600 பணமும், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, எண்ணெய் வகைகள் மற்றும் மளிகை பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து ராமதாஸ் திருவாலங்காடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பல்பொருள் அங்காடி கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.