திருவள்ளூர் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) கூட்டம்

பதிவு:2023-11-09 10:17:04



திருவள்ளூர் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) கூட்டம்

திருவள்ளூர் நவ 09 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா) கூட்டம் நடைபெற்றது. திஷா குழு தலைவரும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட ஆட்சியரும் திஷா குழு உறுப்பினர் செயலருமான த.பிரபுசங்கர் முன்னிலை வகித்தார்.அப்பொழுது திஷா குழு தலைவர் பேசியதாவது :

திருவள்ளூர் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு மேற்கொண்ட பல்வேறு முயற்சியால செயல்படுத்தப்படாமல் இருந்த பல்வேறு திட்டங்கள் தற்பொழுது செயல்படுத்தப்பட்டுள்ளது. திஷா குழு கூட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்ககம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், ஆகிய திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்களுடனும் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களுடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்கள் குறித்து ஊரக வளர்ச்சி துறை தொடர்பான அலுவலர்களுடனும் மேலும் தேசிய சுகாதார திட்டம் மற்றும் சுகம்யா பாரத் அபியான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் சார்ந்த அலுவலர்களுடனும் கலந்தாலோசிக்கபட்டது.

மொத்தம் இன்றைய தினத்தில் 34 திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு கலந்து கலந்தாலோசிக்கப்பட்டு, அத்திட்டங்களில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறித்து விவாதிக்கப்பட்டது. திட்டங்களை முறைப்படுத்தி விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவும் பொதுமக்கள் அதனை முறையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி),துரை சந்திரசேகர் (பொன்னேரி), திஷா குழு உறுப்பினர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஒ.சுகபுத்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான்,சார் ஆட்சியர் (பொன்னேரி) ஐஸ்வர்யா ராமநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.