பதிவு:2023-12-06 15:43:43
வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பொன்னேரி வட்டத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு
திருவள்ளூர் டிச 06 : திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட ஆலாடு மனோபுரம், ஏ.ரெட்டிப்பாளையம், பிரளயம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளையும் அவ்வெள்ளநீரை அகற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் வருவாய்த்துறை அரசு செயலருமான வி.ராஜாராமன் மற்றும் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் ஆகியோர் முன்னிலையில் அப்பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட , ஆலாடு மனோபுரம், ஏ.ரெட்டிப்பாளையம், பிரளயம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஆரணியாற்றின் கரைப்பகுதிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிப்புக்குள்ளாக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட ஏ.ரெட்டிப்பாளையம் மற்றும் பிரளயம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் அமைச்சர் கள ஆய்வு மேற்கொண்ட போது, அப்பகுதியில் உள்ள பொதுமக்களோடு நேரடியாக கலந்துரையாடி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அக்கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து,மிக்ஜாம் புயல் காரணமாக பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்களை அமைச்சர் நேரில் பார்வையிட்டு கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்து அக்கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்வுகளின் போது, பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.