திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேளாண்மை- உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் :

பதிவு:2023-12-06 15:50:29



திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேளாண்மை- உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் :

திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேளாண்மை- உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் :

திருவள்ளூர் டிச 06 : திருவள்ளூர் மாவட்டம் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட மாதிரவேடு, சுந்திரசோழபுரம் பகுதிகள், திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட செயின்ட் கிளேரட் பள்ளி மற்றும் செயின்ட் ஏஞ்சல் பள்ளி, நடுக்குத்தகை ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட ஶ்ரீராம் நகர், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஜோதி நகர், ஓம் சக்தி கானோபஸ் ஆகிய பகுதிகளில் வேளாண்மை- உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான சா.மு.நாசர் முன்னிலையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் மற்றும் அலுவலர்களுடன் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக போர்கால அடிப்படையில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் டீசல் மோட்டார்கள் கொண்டு வெளியேற்றவும், சுகாதார துறை பணியாளர்கள் பிளிச்சிங் பவுடர் தெளித்து பொது மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படாத வண்ணம் பணிகள் நடைபெற வேண்டும் எனவும், அம்மா மாளிகையில் தங்கி இருக்கும் பொது மக்களுக்கு பால், பிஸ்கேட் மற்றும் ரொட்டிகள் விநியோகம் செய்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உணவு வழங்குதல் சிறப்பாக நடைபெற வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநகராட்சி நகராட்சி அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.மேலும், தமிழ்நாடு மின்சார வாரிய துறை அலுவலர்களுக்கு மின்சார துண்டிப்பு இல்லாமால் மின்சார வழங்கும் படியும் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வுகளின் போது, மேயர் கு.உதயகுமார், நில நிர்வாக ஆணையர் நாகராஜன்,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஒ.சுகபுத்திரா,ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்,காவல் துணை ஆணையர் அய்மன் ஜமால், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள், நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், பொது பணித்துறை அலுவலர்கள் மற்றும் ஆவடி மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.