திருவள்ளூர் அருகே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பல கோடி மோசடி : வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு :

பதிவு:2022-05-10 23:16:43

திருவள்ளூர் மே 10 : திருவள்ளூர் அடுத்த பட்டரைப் பெரும்புதூரில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மேலாளர் மற்றும் அப்போதைய கூட்டுறவு சங்க தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் மீது விவசாயிகளுக்கு கடன் பெற்றுத் தருவதாக கூறி கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு பதிந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 7 வருடங்களாக வழக்கை சரியாக விசாரணை செய்யாமல் தாமதப்படுத்துவதாக கூறி பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ராமச்சந்திரன் என்பவர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பொழுது அவரை தடுத்து போலீசார் கைது செய்து,திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். கடந்த வாரம் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக பட்டரைபெரும்புதூர் ராமச்சந்திரன் கூறியிருந்த நிலையில் பட்டரைபெரும்புதூர் கிராமத்திற்கு நேரடியாக சென்ற டிஎஸ்பி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.