திருவள்ளூரில் பெய்த கனமழையால் திருவள்ளூர் நகராட்சியில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் வடியாததால் பொது மக்கள் அவதி : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

பதிவு:2023-12-06 15:55:30

திருவள்ளூர் டிச 06 : திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்தது இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சி புங்கத்தூரில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீர் வடியாததால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியிருப்பதால் சமையல் செய்ய முடியாமலும், வீட்டைவிட்டே வெளியே வர முடியாத நிலை இருப்பதாகவும் பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதே போல் அம்சா நகர் பகுதியில் மழை நீர் தேங்கியதை அகற்றாததால் வீட்டைவிட்டே யாரும் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் திருவள்ளூர் நகராட்சியை ஒட்டி உள்ள காக்களூர் ஊராட்சியை இணைக்கும் பகுதியான வி.எம்.நகரில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தெரு சாலைகள் இந்த மழை நீரால் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் நடந்து செல்லவும் இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களில் செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கியுள்ள மழை நீரை அகற்ற ஊராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து விஎம் நகரில் தேங்கியுள்ள மழை நீரை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, விடியா திமுக ஆட்சியில் பொது மக்களின் பிரச்சினைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், அதிமுக சார்பில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட புங்கத்தூர், அம்சாநகர் போன்ற பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 37 ஆண்கள், 51 பெண்கள் 22 குழந்தைகள் 100-க்கும் மேற்பட்டோர் லஷ்மிபுரத்தில் உள்ள நகராட்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நலத்திட்ட உதவியும் வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனையடுத்து முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா தலைமை பெட்ஷீட், பிரட் மற்றும் பிஸ்கெட் ஆகியவற்றை வழங்கினார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா வழியில் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக தெரிவித்தார். இதில் நகர செயலாளரும் கவுன்சிலருமான ஜி.கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பாலாஜி, கேபிஎம் எழிலரசன், ஜோதி, செல்வம், குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.