திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :

பதிவு:2023-12-22 18:13:59



திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் டிச 22 : குடியரசு துணைத் தலைவர் மக்களவைத் தலைவர் ஆகியோரை அவமரியாதை செய்தும் தூற்றியும் செயல்பட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரி்ல் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜசிம்ம மகேந்திரா என்ற அஷ்வின்குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் சதீஷ்குமார் வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆர்யா சீனிவாசன், லயன் சீனிவாசன், ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் பாஸ்கரன் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி சிறப்புரையாற்றினார். அப்போது, அரசியல் சாசன பதவியில் உள்ள துணை குடியரசு தலைவர், மக்களவைத் தலைவர் ஆகியோரை அவமரியாதை செய்த ராகுல்காந்தி மற்றும் துணையாக நின்ற எதிர்கட்சி மக்களவை உறுப்பினர்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் சண்முகம், முல்லை ஞானம், மாநில ஓபிசி அணி பிரிவு செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர்கள் மொரார்ஜி தேசாய், பாலாஜி, பன்னீர்செல்வம், மண்டல தலைவர்கள் பழனி, ரவிக்குமார், சுரேஷ், அணித்தலைவர்கள் லோகேஷ்பிரபு, நாகராஜ், மகளிரணி நிர்வாகி வாசுகி, சித்ராதேவி, சிவரஞ்சனி, ரகுசந்திரன் வி.தனசேகர் மற்றும் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.