பதிவு:2023-12-22 18:23:13
பெருமாள் பட்டு ஊராட்சியில் ரூ.1.07 கோடியில் சாலை அமைக்கும் பணி ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் டிச 22 : திருவள்ளூர் அடுத்த பெருமாள் பட்டு ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று ரூ 1.07 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்.திருவள்ளூர் ஒன்றியம் பெருமாள் பட்டு ஊராட்சியில் சாலை குண்டும் குழியுமாக இருந்து வந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி செல்லும் சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இது குறித்து பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவரது தீவிர முயற்சியால் இப்பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்க ரூ.1.07 கோடி ஒதுக்கப்பட்டு இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
அதன்படி பெருமாள் பட்டு ஊராட்சிக்குட்பட்ட கேஜி ஆர் வினோத் டவுன் நகரில் இருந்து முல்லை நகர் வரை 860 மீட்டர் தூரத்திற்கு ரூ. 47 லட்சம், ஆர்.ஜி.பி. நகர் பகுதி 2-ல் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க ரூ. 61 லட்சம் என 2 இடங்களில் ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் சாலை எனக்கும் பணியை பூந்தமல்லி எம்எல்ஏ ஆ. கிருஷ்ணசாமி கலந்து கொண்டு புதிய சாலை அமைப்பதற்காக அடிக்கல்லை நாட்டி தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றிய ஆர்.ஜெயசீலன், நிர்வாகிகள் பரமேஸ்வரன், சௌந்தர்ராஜன், ஸ்ரீதர், தங்கம் முரளி, சக்திவேல், நடராஜ், ஏழுமலை, கோபி, கௌரி கஜேந்திரன், ஜெய புகழேந்தி, சுரேஷ், மகேஷ் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.