திருவள்ளூர் மாவட்டத்தில் கலைக்கட்டியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வழிபாடு :

பதிவு:2023-12-25 14:36:14



திருவள்ளூர் மாவட்டத்தில் கலைக்கட்டியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வழிபாடு :

திருவள்ளூர் மாவட்டத்தில் கலைக்கட்டியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வழிபாடு :

திருவள்ளூர் டிச 25 : திருவள்ளூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டியது.அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சலேசியர் தேவாலயம் வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தேவாலய வளாகத்தில் இயேசு பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கிறிஸ்துமஸ் மரம், உட்பட பல்வேறு புதுவகையான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. இயேசு கிறிஸ்து குழந்தை பிறப்பை போற்றும் வகையல் குழந்தை வடிவிலான இயேசு கிறிஸ்துவை மக்களிடையே பங்கு தந்தைகள் கிளாமன்ட் பாலா காட்டி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

அதேபோல் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் உள்ள திருத்தூதர் மத்தேயு அருள்தலம் கிறிஸ்தவ தேவாலயத்தில் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகத்துடன் விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.விதவிதமான வடிவங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் பாடல்களை ஒலித்தனர். 12 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது .கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தம் புது ஆடை அணிந்து மிகவும் மகிழ்ச்சியுடன் முழு மனதுடன் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரியகுப்பத்தில் உள்ள டிஇஎல்சி கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்த வெளியே வந்தவர்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். துணிப் பையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மஞ்சப்பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்ட்டது.

அதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதை அடுத்து. அனைத்து கிறிஸ்தவ மக்களும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.