திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பென்ஜமின், பி.வி.ரமணா பங்கேற்பு

பதிவு:2023-12-25 14:40:18



திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பென்ஜமின், பி.வி.ரமணா பங்கேற்பு

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பென்ஜமின், பி.வி.ரமணா பங்கேற்பு

திருவள்ளூர் டிச 25 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆயில் மில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார். கிறிஸ்தவ மத போதகர்கள் பிரான்சிஸ், மேஷாக் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் பா. பெஞ்ஜமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச சேலை, பேண்ட்,சட்டை மற்றும் பிரியாணி ஆகியவற்றை வழங்கி பேசினார்.

அப்போது, மக்களின் நலனுக்காக திட்டங்களை கொடுக்க கூடிய இயக்கமாக அதிமுக திகழ்கிறது. தற்போது எதிர்கட்சியாக இருந்தாலும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யக் கூடிய இயக்கமாக உள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை இந்த விடியா அரசு நேரில் சந்திக்கவில்லை. ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் பொது மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு நிவாரணப் பொருட்களை வழங்கியதாக தெரிவித்தார்.

ஒரே ஆண்டில் 5 லட்சம் முதியோர்கள், விதவைத் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு போன்றவர்களுக்கு 110 விதியின் கீழ் உதவித் தொகை வழங்கிய ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் புகழாரம் சூட்டினார் இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அதிமுக என்றைக்குமே மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் இயக்கம். புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி வழியில் தற்போது புரட்சித் தமிழரும் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இனி வரும் காலத்தில் பாஜகவுடனான கூட்டணி நிச்சயம் இருக்காது என்ற புரட்சித் தமிழரின் நிலைப்பாட்டில் எந்த மாறுபாடும் இருக்காது. சிறுபான்மை மக்களுக்கு அதிமுக என்றும் துணை நிற்கும் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் சுதாகர், ராமஞ்சேரி மாதவன் திருவாலங்காடு சக்திவேல், ட்டீ.டி.சீனிவாசன், இ.என்.கண்டிகை ரவி, நிர்வாகிகள் இன்பநாதன், சிற்றம் சீனிவாசன், நகர செயலாளர் கந்தசாமி, எழிலரசன்,பாலாஜி, நகர்மன்ற உறுப்பினர் செந்தில்குமா்ர், பாலாஜி,தியாகு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.