பதிவு:2022-03-26 12:00:38
பெறப்பட்ட மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து குறைதீர்ப்பு நடவடிக்கை திருவள்ளூர் மாவட்டம் இரண்டாமிடம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (12.03,2022) தலைமைச் செயலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில், முதலமைச்சரின் உதவி மையம் மூலம் முதல்வரின் முகவரி துறையில் பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய முறையில் ஆய்வு செய்து குறை தீர்வு நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டதற்காக 2022-ம் ஆண்டில் மாநில அளவில் 2-ம் இடம் பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். உடன் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, பொதுத்துறை செயலாளர் முனைவர்.டி.ஜகந்நாதன மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.