திருவள்ளூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்த தமிழக நிதியமைச்சரைக் கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பதிவு:2022-05-10 23:18:14

திருவள்ளூர் மே 10 : தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது, அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேறும் என எதிர்கட்சித் தலைவராக இருக்கும் போது நடைபெற்ற மாநாட்டில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையிலும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என அறிவித்ததுடன் முதல்வரான பிறகு நடைபெற்ற மாநாட்டிலும் படிப்படியாக அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேறும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரில் நடைபெற்ற விவாதத்தின் போது நிதியமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன் பேசும் போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவே முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இன்று அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது நிதியமைச்சரின் பேச்சுக்கு கண்டனத்தை தெரிவித்ததோடு, நாளை நடைபெறும் பட்ஜெட்கூட்டத் தொடரிலேயே இதற்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். உடனடியாக சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி தீர்வு காணாதபட்சத்தில் 11-ந் தேதி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கூட்டம் நடத்தி அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.