திருவள்ளூர் மாவட்டத்தில் நவரை பருவ நெல், ராபி பருவ பச்சைபயிறு, நிலக்கடலை, எள் மற்றும் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல் :

பதிவு:2023-12-28 15:15:23

திருவள்ளூர் டிச 27 : திருவள்ளூர் மாவட்டத்தில் நவரை பருவ நெல்,ராபி பருவ பச்சைபயிறு, நிலக்கடலை, எள் மற்றும் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தினை செயல்படுத்த திருவள்ளூர் மாவட்டத்திற்கு 2023 - 2024 ஆம் ஆண்டுக்கு யூனிவர்சல் சோம்போ பொது காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க நடப்பு ராபி பருவம் 2023 - 24 ல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நவரை நெல் பயிர் - 15.02.2024. ராபி பருவ பச்சைபயறு - 15.02.2024, நிலக்கடலை - 31.01.2024, எள் - 15.02.2024 மற்றும் கரும்பு - 30.03.2024 ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.512, பச்சைபயறு ஏக்கருக்கு ரூ.271, நிலக்கடலை ஏக்கருக்கு ரூ.456, எள் ஏக்கருக்கு ரூ.158, கரும்பு ஏக்கருக்கு ரூ.3000 காப்பீடு தொகையாக செலுத்தினால் போதுமானது.

நடப்பு பருவ அடங்கல், கணிணி சிட்டா,ஆதார் நகல். வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், முன்மொழிவு மற்றும் விவசாயி பதிவு விண்ணப்பம் ஆகியவற்றுடன் உரிய காப்பீட்டு கட்டணத் தொகை செலுத்தி அருகில் உள்ள பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றில் பயிர் காப்பீடு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும். பதிவு செய்தவுடன் பதிவு செய்த விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என விவசாயிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.