பன்னூர் கிராமத்தில் குடிபோதையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை : மப்பேடு போலீசார் விசாரணை :

பதிவு:2023-12-28 15:19:01



பன்னூர் கிராமத்தில் குடிபோதையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை : மப்பேடு போலீசார் விசாரணை :

பன்னூர் கிராமத்தில் குடிபோதையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை : மப்பேடு போலீசார் விசாரணை :

திருவள்ளூர் டிச 27 : கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்னூர் கிராமம், சேவரியர் தெருவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரின் மகன் ஏசுபிரபு (37) டிரைவர் வேலை செய்து வந்த இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி யோகேஸ்வரி (33) என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர.

மேலும் இவருடன் அம்மா ரோசாலி, தம்பி ஸ்டாலின் பிரபு ஆகியோரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். மேலும் ஏசுபிரபுவுக்கு மது பழக்கம் இருப்பதால் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வதுடன் நான் தூக்கு மாட்டிக் கொள்வேன் என அடிக்கடி கூறி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று 26-ஆம் தேதி ஏசு பிரபுவின் மனைவி யோகேஸ்வரி உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தனது குழந்தைகளுடன் காலை சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மீண்டும் பிற்பகல் 1 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள் தாழ்ப்பால் போட்டு இருப்பதால் பின்பக்க கதவை திறந்து பார்த்துள்ளார் யோகேஸ்வரி.

அப்போது மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த யோகேஸ்வரி அக்கம் பக்கத்தினரை அழைத்து கணவர் ஏசுபிரபுவை மீட்டு பார்த்துள்ளார். ஆனால் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இது குறித்த தகவலின் பேரில் மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் ஏசுபிரபுவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடி போதையில், தூக்கு மாட்டிக்கொள்வேன், தூக்கு மாட்டிக்கொள்வேன் என்று பல முறை சொல்லி வந்தவர் நிஜத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.