திருவள்ளூரில் நகர்மன்ற குழு சாதாரண கூட்டம் : வெள்ள நிவாரணம் ரூ. 6 ஆயிரம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் :

பதிவு:2023-12-28 15:26:32



திருவள்ளூரில் நகர்மன்ற குழு சாதாரண கூட்டம் : வெள்ள நிவாரணம் ரூ. 6 ஆயிரம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் :

திருவள்ளூரில் நகர்மன்ற குழு சாதாரண கூட்டம்  : வெள்ள நிவாரணம் ரூ. 6 ஆயிரம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் :

திருவள்ளூர் டிச 27 : திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாக கூட்டரங்கத்தில் நகர்மன்ற குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில், நகராட்சி ஆணையாளர் போ.வி.சுரேந்திரஷா, நகர்மன்ற துணைத்தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வேலாயுதம், வி.சுமித்ரா வெங்கடேசன், பி.நீலாவதி பன்னீர்செல்வம், அம்பிகா ராஜசேகர் ,கே.பிரபாகரன், ஆர்.பிரபு, சாந்தி கோபி, அயூப் அலி, டி.கே.பாபு, வி.இ.ஜான், ஜி.ஆர்.ராஜ்குமார் (எ)தாமஸ், பத்மாவதி ஸ்ரீதர், அருணா ஜெய்கிருஷ்ணா, இந்திரா பரசுராமன், வி.சீனிவாசன், எ.எஸ்.ஹேமலதா, , ஆர்.விஜயகுமார், வி.எம்.கமலி, ஆனந்தி சந்திரசேகர், எல்.செந்தில்குமார், க.விஜயலட்சுமி, எஸ்.தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகளுக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது, நகராட்சியில் உள்ள 11-ஆவது வார்டு பகுதியில் உள்ள ஒரு சில தெருக்களில் கழிவு நீர் வாய்க்கால் வசதி கிடையாது. அதேபோல், வார்டுகளில் உள்ள ஒவ்வொரு தெருக்கள் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் வார்டு எல்லை பெயர் பலகைகள் வைக்க வேண்டும். பாதாளச்சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் தடுக்கும் வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வார்டு உறுப்பினர் வி.இ.ஜான் தெரிவித்தார்.

அதே போல் 3-ஆவது வார்டில் தலக்காஞ்சேரி சாலை, எடப்பாளையம் முதல் விநாயகர் கோயில் வரையில் சாலை சீரமைக்க வேண்டும். மழைநீர் எளிதாக வழிந்து செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் அமைக்க வேண்டும் என நகர் மன்ற உறுப்பினர் சுமித்ரா வெங்கடேசன் வலியுறுத்தினர். அதேபோல் 14-ஆவது வார்டில் வி.எம்.நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஒப்பந்த தொழிலாளர்களான தூய்மை பணியாளர்கள் சரியாக வரவில்லை. அதனால் நாள்தோறும் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழையால் சாலைகள் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுவதாக நகர்மன்ற உறுப்பினர் அருணா ஜெயகிருஷ்ணா தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் ரூ.6ஆயிரம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் பேசும்போது, மிக்ஜாம் புயலால் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீண்டும் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், சேதமடைந்த சாலைகள், பாதாள சாக்கடை கழிவு நீர் வெறியேறாமல் இருக்கவும் போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும். மேலும், நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளின் எல்லைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக கடைகள் ஏலம், செலவு மற்றும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான 36 தீர்மானங்கள் அனைத்து வார்டுகளின் உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டன.இந்தக் கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், நகர் நல அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சரவணன் உள்பட நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.