திருவள்ளூரில் பா.ஜ.க விவசாயிகள் அணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

பதிவு:2023-12-28 15:31:53



திருவள்ளூரில் பா.ஜ.க விவசாயிகள் அணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூரில் பா.ஜ.க விவசாயிகள் அணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் டிச 28 : கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும், ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணைய் வழங்கி, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க விவசாய அணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி பிரிவு மாவட்ட தலைவர்கள் சுபாஷ், சரத்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட அஷ்வின்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர். ஜானகிராமன், அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். அப்போது டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் தேவைப்படும் அளவுக்கு தேங்காய்கள் உள்ளதாகவும், மாநில அரசு உடனே கொள்முதல் செய்து, அதிலிருந்து கிடைக்கும் எண்ணையை வரும் பொங்கல் முதல் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், ஜெய்கணேஷ், பொருளாளர் மதுசூதனன், மாவட்ட துணைத்தலைவர்கள் முல்லை ஞானம், சண்முகம், அணி பிரிவு தலைவர்கள் லோகேஷ்குமார், வழக்கறிஞர் சீத்தாராமன், பொன்முடி, மண்டல தலைவர்கள் பழனி, ரவிக்குமார், நிர்வாகிகள் ராமலிங்கம், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்