திருவள்ளூரில் முக்கிய சாலையில் தகராறில் ஈடுபட்டதை தட்டிக் கேட்ட போலீசை கன்னத்தில் அறைந்த கஞ்சா வாலிபர் கைது :

பதிவு:2024-01-08 11:08:07

திருவள்ளூரில் முக்கிய சாலையில் தகராறில் ஈடுபட்டதை தட்டிக் கேட்ட போலீசை கன்னத்தில் அறைந்த கஞ்சா வாலிபர் கைது :

திருவள்ளூரில் முக்கிய சாலையில் தகராறில் ஈடுபட்டதை தட்டிக் கேட்ட போலீசை கன்னத்தில் அறைந்த கஞ்சா வாலிபர் கைது :

திருவள்ளூர் ஜன 06 : திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையம்ஸ வடிவேல் நகர், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன்.இவர் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் பூக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சுரேஷ் (30) என்பவர் கஞ்சா போதையில் ஊர் சுற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை கடைக்கு வந்த மகன் சுரேஷிடம் தந்தை தாமோதரன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கஞ்சா போதையில் இருந்த மகனுக்கும் தந்தைக்கும் வாக்குவாதம் அதிகமானதால் கூட்டம் சேர்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் நகர காவல் நிலைய தலைமைக் காவலர் மூர்த்தி அங்கு சென்று, கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த சுரேஷ் (30) என்பவர், நீ யாருடா என்னை கேட்பதற்கு என திட்டி, தலைமைக் காவலர் மூர்த்தியை தள்ளிவிட்டு கன்னத்தில் அறைந்து பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இதனையடுத்து டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோனி ஸ்டாலின் முக்கிய சாலையில் தகராறில் ஈடுபட்டதோடு, பாதுகாப்பு பணியில் இருந்த தலைமைக் காவலர் மூர்த்தியை தாக்கிய சுரேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.