பேரம்பாக்கத்தில் வீட்டின் முன்புறம் ஷெட்டில் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்தது : ரூ.25 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து நாசம் :

பதிவு:2024-01-08 11:13:00

திருவள்ளூர் ஜன 06 : திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் எம்ஜிஆர் நகர், மருத்துவமனை ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி ஷர்மிளா (32) உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவருக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உடன் திருமணம் ஆகி கணவர் காஷ்மீர் ரெஜிமென்ட் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதால் பேரம்பாக்கத்தில் உள்ள தனது அம்மா வீட்டில் ஷர்மிளா தங்கி உள்ளார்.

ஷர்மிளாவின் தந்தை சாமிக்கண்ணு (60). ஆட்டோ எலக்ட்ரீசியனான இவர் வீட்டின் முன்புறம் மெட்டல் ஷீட்டிலான ஷெட் அமைத்து கார் மெக்கானிக் பணி செய்து வருகிறார்.இந்நிலையில் ஷர்மிளாவுக்கு சொந்தமான கார் மற்றும் இரு சக்கர வாகனம், மற்றும் இவரது அண்ணன் வெங்கடேசனின் வாகனங்கள் மற்றும் 4 விற்பனைக்காக வைத்திருந்த மின் மோட்டார் இருசக்கர வாகனங்கள், ஒரு டிராக்டர் ஆகியவற்றை ஷெட்டில் நிறுத்தி வைத்துள்ளார்

இந்நிலையில் நேற்று 5-ஆம்தேதி அதிகாலை 1.45 மணிக்கு எரியும் சத்தம் கேட்டு எழுந்து வந்து ஷர்மிளா பார்த்துள்ளார்.அப்போது அனைத்து வாகனமும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்துவதற்குள் 2 கார்கள், 1 டிராக்டர், 7 இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக எரிந்து நாசமானது .

இதுகுறித்து ஷர்மிளா மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரில், தங்களது வீட்டு அருகே சந்தேகப்படும் படியான நபர்கள் சுற்றிக் கொண்டிருந்ததாகவும் யாரோ தீ பற்றி வைத்திருக்கலாம் என்றும் ரூ.25 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து நாசமானதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார்.இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.