பதிவு:2024-01-08 11:42:51
இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 12 வது மற்றும் இந்திரா கல்வியியல் கல்லூரியின் 14 வது பட்டமளிப்பு விழா :
திருவள்ளூர் ஜன 06 : திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் அமைந்துள்ள இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 12-ஆவது மற்றும் இந்திரா கல்வியியல் கல்லூரியின் 14-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திரா பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் என் வேல்விழி அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரியின் நிறுவன தலைவரும் எம்எல்ஏ.வுமான வி.ஜி.ராஜேந்திரன் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பதக்கங்களையும், 800 மாணாக்கர்களுக்கு பட்டங்களையும் வழங்கி பேசினார்.
அப்போது எதிர்காலத்தில் சமூகத்திற்கும் பெற்றோர்களுக்கும் நற்பெயரை பெற்று பணியாற்றிட வேண்டுமென அனைவருக்கும் அறிவுறுத்தினார்.தொடர்ந்து இந்திரா கல்விக்குழுமத்தின் நிர்வாக இயக்குநர் இந்திரா ராஜேந்திரன் கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்திரா மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர்.பி.வசந்தாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கல்வியியல் கல்லூரியின் முதல்வர்.டாக்டர்.எல்.ஏ.ஜாய் பெமிலா நன்றி தெரிவித்தார். இதில் கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.