பதிவு:2024-01-08 11:51:03
திருவலாங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியே 4 லட்சம் மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம் : குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஜன 06 : தமிழ்நாடு முதலைமைச்சர் திருவலாங்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாத்தூர் என். என். கண்டிகை மற்றும் பூனிமாங்காடு ஊராட்சிகளுக்கு உட்பட்ட 15 குடியிருப்புகளுக்கு 4 கோடியே 4 லட்சம் மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை கானொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார் அதனை தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் துவக்கி வைத்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியத்தில் உள்ள நல்லாத்தூர், என்.என்.கண்டிகை மற்றும் பூனிமாங்காடு ஊராட்சிகளில் உள்ள நல்லாத்தூர் மற்றும் 15 குடியிருப்புகளுக்கு கொசஸ்த்தலையார் ஆற்றினை நீராதாரமாக கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான அரசு ஆணை எண் 16/ நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை/ நாள் – 26.07.2022ல் ரூ. 4.04 கோடிக்கு ஜல் ஜீவன் திட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்திட்டம் முடிவுறும் தருவாயில்இ தற்கால ஆண்டு (2022) மக்கள் தொகையின்படி 9182 மக்களுக்கு 0.413 மில்லியன் லிட்டர், இடைக்கால ஆண்டு (2037) மக்கள் தொகையின்படி 10156 மக்களுக்கு 0.505 மில்லியன் லிட்டர் மற்றும் உச்சகால ஆண்டு (2052) மக்கள் தொகையின்படி 11196 மக்களுக்கும் 0.551 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.
இக்குடியிருப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு 0.551 மில்லியன் லிட்டர் (உச்சநிலை ஆண்டு 2052) குடிநீர் வழங்ககுவதற்காக ரூ. 4.04 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு ஜல் ஜீவன திட்டத்தின் மூலம் நிதி ஆதாரம் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான நீரானது கொசஸத்தலையார் ஆற்றில் மூன்று எண்ணிக்கையில் 4.50 மீ விட்டமுள்ள நீர் உறிஞ்சி கிணறு மூலம் பெறப்பட்டு, நீர் மூழ்கும் மோட்டார் மூலம் 100 மி.மீ விட்டம் கொண்ட வார்ப்பட இரும்பு குழாய்கள் மூலம் ஆற்றின் கரையில் உத்தேசிக்கப்பட்டுள்ள 50, 000 லிட்டர் தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்படும். இத்தொட்டியிலிருந்து பிரதான குழாய்கள் (1) பூனிமாங்காடு ஊரட்சிகளுக்கு தனியாக ஒரு பிரதான குழாயும் (2) நல்லாத்தூர் மற்றும் என்.என்.கண்டிகை ஊராட்சிகளுக்கு தனியாக ஒரு பிரதான குழாயும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் உந்து செய்யப்படுகிறது.
இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 16.12.2022 அன்று வழங்கப்பட்டு, இத்திட்டம் முழுமையாக செப்டம்பர் 2023ல் முடிக்கப்பட்டு இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் தமிழ்நாடு முதலைமைச்சரால் இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்;க்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் அமல தீபன்,உதவி செயற் பொறியாளர்திரு.பிரபாகரன், இளநிலை பொறியாளர் சம்பத் குமார், வாட்டசியர் மதன் ,ஊராட்சி மன்ற தலைவர்கள் நிர்மலா கோவிந்தசாமி, நற்குனம்,கலையரசி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.