திருவள்ளூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாயவிலைக் கடைகளில் வரும் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-01-09 10:24:38

திருவள்ளூர் ஜன 09 : திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர் ,பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சாக்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரொக்கப் ணம் ரூ.1000, ஒருகிலோ பச்சரிசி,ஒருகிலோ சாக்கரை மற்றும் ஒருமுழுக் கரும்பு பொங்கல் பரிசுத் தொகுப்பாக அந்தந்த நியாயவிலைக் கடைகளில் வரும் 10.01.2024 முதல் 13.01.2024 வரை வழங்கப்படவுள்ளது. விடுபட்ட நபர்களுக்கு 14.01.2024 ல் வழங்கப்படவுள்ளது.

பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ள தகுதியுள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு 07.01.2024 முதல் 09.01.2024 வரை டோக்கன்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று சம்மந்தப்பட்ட நியாய பணியாளர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ஏதேனும் விளக்கங்கள்,சந்தேகங்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்க விரும்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் இதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 6 மணி வரை 044 - 27666746 மற்றும் 044-27664177 என்ற தொலைபேசி எண்களுக்கும் (கட்டணமில்லா தொலைபேசி) மாநில அளவில் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800- 425- 5901 ஆகிய எண்களிலும் ஆணையரகத்தில் கட்டுப்பாட்டு அறை 044-28592828 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.