வெங்கத்தூர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு நிதி வழங்காத அதிகாரிகள் மீது புகார் :

பதிவு:2024-01-09 10:34:07



வெங்கத்தூர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு நிதி வழங்காத அதிகாரிகள் மீது புகார் :

வெங்கத்தூர் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு நிதி வழங்காத அதிகாரிகள் மீது புகார் :

திருவள்ளூர் ஜன 09 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவர் சுனிதா பாலயோகி. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுவை அளிக்க ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரும் பாமக மாநில இளைஞர் சங்க செயலாளருமான பாலா என்கிற பாலயோகி, முன்னாள் அமைப்பு செயலாளர் நா. வெங்கடேசன் உள்ளட்ட சிலர் கோரிக்கை மனுவை அளிக்க வந்தனர். வெங்கத்தூர் ஊராட்சியில் கடந்த 2020-21 நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான 14 லட்சம் ரூபாயை சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அளிக்காமல் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் அளிக்க வந்தார். ஆனால் கலெக்டர் பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்ததால் பணியில் இருந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார்.

அதனைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அதனை படித்து பார்க்காமல், என்ன பிரச்சினை என்று கேட்காமல் வாங்கி வைத்துக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரும் பாமக மாநில இளைஞர் சங்க நிர்வாகியுமான பாலா என்கிற பாலயோகி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ஊராட்சியையும் மக்களையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் பொது மக்களின் கோரிக்கைகளை பெற மாவட்ட கலெக்டர் நேரில் பெற்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நிறைவேற்ற அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.