பதிவு:2024-01-21 09:02:08
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் வாகனங்கள் ஏல அறிவிப்பு :
திருவள்ளூர் ஜன 21 : திருவள்ளூர் மாவட்ட காவல் துறைக்கு சம்பந்தப்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் 14 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 6 ஆக மொத்தம் 20 வாகனங்கள் அரசாணை(நிலை) எண். 479 உள் ( காவல்.11) துறை,நாள் 10.11.2021 மற்றும் அரசாளை (நிலை) எண். 529 உள் (போக்குவரத்து 4) துறை . 24.11.2021 ன் படியும் வருகின்ற 29.01.2024 ம் தேதி காலை 10 மணி அளவில் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தின் அருகே 20 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது.
வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள் முன் வைப்பு கட்டணத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ. 5 ஆயிரம் செலுத்த வேண்டும். அதற்க்கான டோக்கன் காலை 8 மணி முதல் 10 மணி வரை வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரி 12 சதவிகிதம் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவிகிதம் உடனடியாக செலுத்திவிட வேண்டும். வாகனத்தின் விவரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் பொது ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் கார்டு, அரசால் அங்கிகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வரவேண்டும் ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் கொடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை எலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும் என மாவட்ட காவல்த்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.