பதிவு:2024-01-21 09:06:13
உளுந்தை ஊராட்சி மன்றத் தலைவர் எம்.கே.ரமேஷூக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டு :
உளுந்தை ஊராட்சி மன்றத் தலைவர் எம்.கே.ரமேஷூக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டு :
திருவள்ளூர் ஜன 21 : திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் எம்.கே. ரமேஷ். இவர் திமுகவின் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆவார்.கடம்பத்தூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவராகவும் உள்ளார்.
இவர் தனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளியின் மேம்பாட்டுக்காகவும், பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான நல திட்டங்களை வழங்கி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரின் இந்த கல்வி சேவையை பாராட்டி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவரை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்து, பாராட்டு சான்றிதழ் அளித்து வெகுவாக பாராட்டினார்.