திருவள்ளூரில் உள்ள ஏபிஎஸ் கல்விக்குழுமம் சார்பில் 14-வது ஆண்டு விளையாட்டு தினவிழா :

பதிவு:2024-01-21 09:08:10



திருவள்ளூரில் உள்ள ஏபிஎஸ் கல்விக்குழுமம் சார்பில் 14-வது ஆண்டு விளையாட்டு தினவிழா :

திருவள்ளூரில் உள்ள ஏபிஎஸ் கல்விக்குழுமம் சார்பில் 14-வது ஆண்டு விளையாட்டு தினவிழா :

திருவள்ளூர் ஜன 21 : திருவள்ளூரில் உள்ள ஏபிஎஸ் கல்விக் குழுமப் பள்ளிகளான ஏபிஎஸ் வித்யாமந்திர் சிபிஎஸ்இ, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குளோபல் ஸ்மார்ட் பள்ளிகளின் ஒருமித்த 14-வது ஆண்டு விளையாட்டு தின விழா திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி குழுமத் தலைவர் மற்றும் நிறுவனர் இரமேஷ் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

இந்த கல்விக்குழுமத்தின் அறக்கட்டளைப் பொருளாளர் பிரேமா சுப்பிரமணியம், செயலர் எஸ் சக்திபாலா, உறுப்பினர்கள் பாபு, தொல்காப்பியன்,,கல்விக்குழுமத்தின் முதன்மை பாடத்திட்ட இயக்குனர் சி.சதீஷ், பாடத்திட்ட இடக்குனர் சுந்தரமூர்த்தி, ஏபிஎஸ் வித்யாமந்திர் முதல்வர் ஆர்.காயத்ரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் இரத்னாபாய், குளோபல் ஸ்மார்ட் பள்ளியின் துணை முதல்வர் காயத்ரி கண்ணன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக அர்ஜூனா விருதுபெற்ற பாஸ்கரன், ஓய்வு பெற்ற காவல் கண்ககாணிப்பாளர் கே.சொக்கலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டு விளையாட்டு விழாவினை தொடங்கி வைத்தனர். இதில் விளையாட்டு கலை நிகழ்ச்சிகளாக மழலையர்கள் வடிவமைத்திட்ட உயற்பயிற்சி, பல்வேறு விதமான குழு உடற்பயிற்சிகள், மற்றும் மாணவர்களின் பிரமீடு வடிமவைப்புச் செயல்பாடுகளும் நடைபெற்றன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் போட்டியில் வெற்றி பெற்ற அனைதச்து நிலை மாணவர்களுக்கும் வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழ்களையும் சிபிஎஸ் கல்விக் குழுமப் பள்ளிகளின் நிர்வாகிகள் வழங்கினர்.இந்த விளையாட்டுப் தின விழாவை மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கண்டு ரசித்தனர்.