திருவள்ளூரில் மது போதையில் மது பாட்டிலை உடைத்து மனைவியை குத்த சென்ற தந்தையை மகன் தடுத்து கீழே தள்ளியதில் கழுத்தில் பாட்டில் குத்தி பலி : எதிர்பாராத விபத்து மரணம் வழக்கில் மகனை கைது செய்து சிறையில் அடைப்பு :

பதிவு:2024-01-21 09:10:39

திருவள்ளூர் ஜன 21 : திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட கிழக்கு குளக்கரைத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். (44). கூலித்தொழிலாளியான இவரது மனைவி புவனேஸ்வரி (40). டெய்லரான இவர் வீட்டிலேயே துணி தைத்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.இவர்களுக்கு நவீன்குமார், (22), லோகேஷ் (20).என்ற 2 மகன்கள் உள்ளனர்.

வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருப்பதால் தினமும் குடித்துவிட்டு வீட்டில் குடும்பத்தாருடன் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் 19-ஆம் தேதி காலை வந்துள்ளார்.இதனையடுத்து அன்று மாலை வீட்டில் மது அருந்தும் போது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இவர்களது மூத்த மகன் நவீன்குமார் வீட்டில் இருந்துள்ளார்.

வாய்தகராறு அதிகமாகவே வெங்கடேசன் தான் கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து மனவவியை குத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது தாயை குத்திவிடப் போகிறார் என்ற பயத்தில் மகன் நவீன்குமார் தந்தையை தடுத்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் மது போதையில் கீழே விழுந்தவர் தான் வைத்திருந்த உடைந்த பாட்டில் கழுத்துப் பகுதியில் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தவர் உயிரிழந்தார்.

இது குறித்து வெங்கடேசனின் மனைவி திருவள்ளூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மது பாட்டிலை உடைத்து அதில் தாயை குத்த வந்த போது மகன் நவீன்குமார் தடுத்து கீழே தள்ளியதால் உடைந்த பாட்டிலால் கழுத்தில் குத்திக் கொண்டு உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து மரணம் என்ற வழக்கில் மகன் நவீன்குமாரை கைதுசெய்த திருவள்ளூர் டவுன் போலீசார் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.