திருவள்ளூரில் கொடி நாள் வசூலில் சாதனை புரிந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு சிறப்பு கேடயமும் அரசின் வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் : மாவட்ட ஆட்சியர் வழங்கி பாராட்டினார் :

பதிவு:2024-01-21 09:16:39

திருவள்ளூர் ஜன 21 : இந்திய திருநாட்டிற்காக இன்னுயிர் ஈந்த படைவீரர்களின் தியாகங்களை நினைவு கூறும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டுதோறும் டிச.7 இல் கொடி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முன்னாள் படை வீரர்கள் குடும்பங்களை பாதுகாக்கவும் துயர் தீர்க்கும் வகையிலும் 2023 ஆண்டிற்கான கொடி நாள் நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி கொடி நாள் வசூல் நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் கொடி நாள் வசூல் சாதனை புரிந்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்.ப.ரவிச்சந்திரனுக்கு சிறப்பு கேடயமும் அரசின் வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

இதில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஓ.சுகபுத்திரா, உதவி ஆட்சியர் பயிற்சி ஆயுஷ் வெங்கட் வத்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணி, முன்னாள் படை வீரர் நல அலுவலர் உதவி இயக்குனர் க.ராஜலட்சுமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.