பதிவு:2022-05-11 12:34:18
எம் ஜி ஆர் கட்சியை விட்டு போனபோதே கவலை படவில்லை, வைகோவை தூக்கி எறிந்தோம், திமுக தேம்ஸ் நதி மாதரி யார் வந்தாலும்,யார் போனாலும் அது பற்றி கவலை இல்லை : திருநின்றவூரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேட்டி
திருவள்ளூர் மே 11 : எழும்பூர் சட்டமன்ற தொகுதி எம் எல் ஏ பரந்தாமன் அவர்களின் தந்தை இந்திரன் அண்மையில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார் இதனையடத்து அவருக்கு 16ம் நாள் திருவுருவ படம் திறப்பு நிகழ்வு திருநின்றவூரில் நடைபெற்றது.இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி,இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,பால்வளத்துறை நாசர் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்று திரு உருவ படத்தை திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த ஆர்.எஸ் பாரதி, தருமபுரி ஆதீனம் பல்லக்கு நிகச்சிக்கு அனுமதி அளித்தது குறித்த கேள்விக்கு எது நியாயமோ, எது நாட்டுக்கு ஏற்றதோ,எது சமுதாயம் ஏற்க்குமோ அதை தான் செய்துள்ளார். அதே போல் திருச்சி சிவா மகன் பாஜக சென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த திமுக கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம் ஜி ஆர் கட்சியை விட்டு போனபோதே கவலை படவில்லை, வைகோவையே தூக்கி எறிந்தோம் ,திமுக தேம்ஸ் நதி மாதரி யார் வந்தாலும்,யார் போனாலும் அது பற்றி கவலை இல்லை,தேம்ஸ் நதி போன்று 70 வருடம் திமுக போய் கொண்டிருக்கிறது இன்னும் நூறு ஆண்டுகள் கடந்து போகும் என தெரிவித்தார்