பதிவு:2024-01-23 21:46:21
பட்டறை கிராமத்தில் பாமக மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி தலைமையில் சிலம்பம் கலையின் வீரத்தை பறைசாற்றும் பாடல் வெளியீட்டு விழா :
திருவள்ளூர் ஜன 22 : திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் அடுத்துள்ள பட்டறை கிராமத்தில் ஸ்ரீ எல்லையம்மன் கோவில் வளாகத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் பறை இசை மற்றும் வளரி பயிற்சி ஸ்ரீ சக்தி சிலம்பம் குழுவினரால் வழங்கப்பட்டு வருகின்றன.
இக்குழுவினர் அரசின் விருதுகள் பல பெற்றுள்ளனர் சக்தி சிலம்பம் பயிற்சியாளர் பழமுதிர் ஏற்பாட்டில் ஸ்ரீ சக்தி சிலம்பம் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. எஸ்.ஆர்.ராம் இசையில் முரசு முருகன் வரிகளில் இன்ப கலீல் குரலில் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி, மாவட்ட அமைப்பு செயலாளர், வெங்கடேசன், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் அஜித்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஸ்ரீ சக்தி சிலம்பம் பாடலை வெளியிட்டு சிறப்பித்தனர்.