பதிவு:2024-01-23 21:57:59
திருவள்ளூர் அருகே மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை :
திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நி்லைய எல்லைக்குட்பட்ட தண்டலம் கண்டிகை கிராமம் பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குப்பன் மகன் ராஜா(47). இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ராஜா மேன் பவர் ஏஜென்சி தொழிலை நண்பர்களுடன் இணைந்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் உடல்நிலைக் கோளாறு காரணமாக ராஜாவின் மனைவி சுசீலா கடந்த 25 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார் ராஜா.இந்நிலையில் 21-ந் தேதி இரவு 7.30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ராஜாவின் மகன் பெருமாள் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி இறந்த மனவேதனையில் இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.