பதிவு:2024-01-23 21:59:27
காதலித்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி கல்லூரி மாணவி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா : திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் இளைஞரை கைது செய்தனர் :
திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் காலனி குடோன் தெருவைச் சேர்ந்தவர் ரகு மகள் யமுனா் (20). இவர் திருத்தணி அரசு சுப்பிரமணிய சுவாமி கலைக் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்
அதே கல்லூரியில் படித்து வரும். பள்ளிப்பட்டு தாலுக்கா கரிமேடு காலனி,பள்ளித் தெருவைச் சேர்ந்த கோபியின் மகன் தேவா (20)என்பவரை ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி திருத்தணி மலைக்கோவிலின் அருகே யாருக்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் யமுனா புகார் கொடுத்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த யமுனா, மாவட்ட கலெக்டரிடம் காதலித்து ஏமாற்றியவரை தன்னுடை சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் தெரிவித்ததால், அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்€றார். இதனையடுத்து அவரை மீட்டு திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தேவாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.