பதிவு:2024-01-23 22:00:44
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாரத் ஜோடா நியாய் யாத்ரா பயணத்தின் போது வழி மறித்து தாக்குதல் நடத்திய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாரத் ஜோடா நியாய் யாத்ரா பயணத்தின் போது வழி மறித்து தாக்குதல் நடத்திய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் அஸ்வின், மாநில ஓபிசி செயலாளர் வெங்கடேசன், தளபதி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஜோஷி பிரேம் ஆனந்த் வரவேற்றார்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய பாஜக அரசு கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதில் நிர்வாகிகள் ராமன், ஜோதி, சுதாகர், மாயாண்டி , வட்டாரத் தலைவர்கள் பழனி, சதீஷ் , கலை, ராஜேஷ், பிரதாப், பாலாஜி , நகர நிர்வாகிகள் , ஜீவா பிரவீன், பாபி, ஹாசன் பாட்ஷா, விஜய், சபீர் மற்றும் திரளான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.