திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்வரம்-4 ஆம் ஆண்டு இசைத் திருவிழா : அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு மாணவர்கள் ரூ . 5 இலட்சம் நிதி உதவி :

பதிவு:2024-01-23 22:07:50

திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்வரம்-4 ஆம் ஆண்டு இசைத் திருவிழா இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமத் தாளாளர்.ப.விஷ்ணு சரண் தலைமை தாங்கினார்.பள்ளி முதன்மை செயல் இயக்குனர் பரணிதரன் முன்னிலை வகித்தார்.

விழாவில் உலகப் புகழ்பெற்ற வீணை இசைக்கலைஞர் கலைமாமணி ராஜேஷ் வைத்யா மற்றும் கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் திருவள்ளூரில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொதுமக்கள், இசைப் பிரியர்கள் மற்றும் ஸ்ரீ நிகேதன் ஆசிரியப் பெருமக்கள், மாணவ மாணவிகள்,பெற்றோர்கள் என 2600-க்கும் மேற்பட்ட இசைப்பிரியர்களுக்கு இசை விருந்து அளித்தனர்.

மேலும் கலைமாமணி. ராஜேஷ் வைத்யா மற்றும் கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோர் இசையை ரசித்து மகிழ்ந்த பொதுமக்கள் தாங்கள் விரும்பிய பாடலை இசையாக வாசிக்கக் கேட்டும், பாடலாக பாடக் கேட்டும் ஆனந்தமடைந்தனர்.

ஸ்ரீ நிகேதனின் ஸ்வரம் -4 ஆம் ஆண்டு இசைக் கச்சேரி டிக்கெட் விற்பனையில் வந்த மொத்த தொகையான ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஏழை எளிய நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் இணை இயக்குனர். டாக்டர். ஆர். சுவாமிநாதனிடம் ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமத் தாளாளர்.ப.விஷ்ணு சரண் வழங்கினார்.

இந்த மாபெரும் இசை விழாவில் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியுடன், திருவள்ளூரில் புதியதாக தொடங்கியுள்ள நித்திய அமிர்தம் இனிப்பு மற்றும் உணவுவகைகள் குழுவினரும், சிருஷ்டி அப்பார்ட்மெண்ட் குழுவினரும், சிட்டி யூனியன் வங்கி குழுவினரும் இணைந்து இந்த இசைக் கச்சேரியை பொதுமக்களுக்கு வழங்கினர்.