பதிவு:2024-01-23 22:15:00
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதியில் 33 லட்சத்து 83 ஆயிரத்து 710 வாக்காளர்கள் : இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வெளியிட்டார் :
திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்த வரைவு வாக்காளர் பட்டியல் 2024-ஐ மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.அதன்படி கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தமுள்ள 330 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 132777, பெண் வாக்காளர்கள் 139802, பிற பாலினத்தவர் 43 ஆக மொத்தம் 272622 வாக்காளர்கள் உள்ளனர். பொன்னேரி தொகுதியில் மொத்தமுள்ள 311 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 125362, பெண் வாக்காளர்கள் 131296, பிற பாலினத்தவர் 29 ஆக மொத்தம் 256687 வாக்காளர்கள் உள்ளனர்.
திருத்தணி தொகுதியில் மொத்தமுள்ள 330 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 134160, பெண் வாக்காளர்கள் 138174, பிற பாலினத்தவர் 28 ஆக மொத்தம் 272362 வாக்காளர்கள் உள்ளனர். திருவள்ளூர் தொகுதியில் மொத்தமுள்ள 296 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 127343, பெண் வாக்காளர்கள் 133723, பிற பாலினத்தவர் 28 ஆக மொத்தம் 261094 வாக்காளர்கள் உள்ளனர். பூந்தமல்லி தொகுதியில் மொத்தமுள்ள 390 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 180252, பெண் வாக்காளர்கள் 187626, பிற பாலினத்தவர் 69 ஆக மொத்தம் 367947 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆவடி தொகுதியில் மொத்தமுள்ள 440 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 216640, பெண் வாக்காளர்கள் 222079, பிற பாலினத்தவர் 94 ஆக மொத்தம் 438813 வாக்காளர்கள் உள்ளனர். மதுரவாயல் தொகுதியில் மொத்தமுள்ள 440 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 212454, பெண் வாக்காளர்கள் 212090, பிற பாலினத்தவர் 117 ஆக மொத்தம் 422861 வாக்காளர்கள் உள்ளனர். அம்பத்தூர் தொகுதியில் மொத்தமுள்ள 350 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 177720, பெண் வாக்காளர்கள் 178503, பிற பாலினத்தவர் 80 ஆக மொத்தம் 356303 வாக்காளர்கள் உள்ளனர்.
மாதவரம் தொகுதியில் மொத்தமுள்ள 467 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 228594, பெண் வாக்காளர்கள் 232229, பிற பாலினத்தவர் 112 ஆக மொத்தம் 460935 வாக்காளர்கள் உள்ளனர். திருவொற்றியூர் தொகுதியில் மொத்தமுள்ள 311 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 134977, பெண் வாக்காளர்கள் 138980, பிற பாலினத்தவர் 129 ஆக மொத்தம் 274086 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3665 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 16 லட்சத்து 70 ஆயிரத்து 279 பேரும், பெண் வாக்காளர்கள் 17 லட்சத்து 12 ஆயிரத்து 702 பேரும் மாற்று பாலினத்தவர்கள் 729 பேரும் என் மொத்தம் 33 லட்சத்து 83 ஆயிரத்து 710 பேர் உள்ளனர்.மேலும் வருகிற 1.4.24, 1.7.24 மற்றும் 1.10.24 ஆகிய தேதிகளில் 18 வயதை பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் அதற்கு முந்தைய காலாண்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் 22.1.24 முதல் அனைத்து அலுவலக வேலை நாட்களில் வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவங்கள் அளிக்கலாம். மேலும் http://voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் Voter helpline App மூலம் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபு சங்கர் தெரிவித்தார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மாலதி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) சோமசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.