டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் :

பதிவு:2024-01-24 18:29:07



டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் :

டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் :

திருவள்ளூர் ஜன 24 : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 100 வேலைவாய்ப்பு முகாம்களின் தொடர்ச்சியாக திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசு ஊரக,நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 03.02.2024 சனிக்கிழமை அன்று திருவள்ளூர் பாண்டூரில் உள்ள இந்திரா மருத்துவக் கல்லூரியில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ, பொறியியல், நர்சிங் படித்தவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு தனியார் துறையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.

இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்;பு அலுவலக பதிவு இரத்து செய்யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.