பதிவு:2024-01-24 18:32:16
திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் ஜன 24 : திருவள்ளூர் இரயில் நிலையம் அருகே திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி ஒன்றியத் தலைவர் சேவியர் குமார் திமுக குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் சதி செயலில் ஈடுபட்ட பாதிரியார் ராபின்சன் உள்ளிட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி மண்டலச் செயலாளரும் வழக்கறிஞருமான மாதவரம் இரா.ஏழுமலை தலைமையில் கோஷங்களை எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சித்ராதேவி,மாநில கொள்கை பரப்பு செயலாளர் இடிமுரசு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.