திருவள்ளூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் : டிடிவி தினகரன் பங்கேற்று ஆலோசனை :

பதிவு:2024-01-24 18:35:14



திருவள்ளூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் : டிடிவி தினகரன் பங்கேற்று ஆலோசனை :

திருவள்ளூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் : டிடிவி தினகரன் பங்கேற்று ஆலோசனை :

திருவள்ளூர் ஜன 24 : திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்ப்டட 13 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏவும், மேற்கு மாவட்ட செயலாளருமான டி.ஏ.ஏழுமலை தலைமை தாங்கினார்.இதில் நிர்வாகிகள் செந்தமிழன், கரிகாலன், பெருமாள், லக்கி முருகன், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு பிறகு பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரும். ஏப்ரல், மே முதல் வாரத்தில் நடைபெறும் தேர்தலில் இந்தியாவின் பிரதமர் யார் என்று முடிவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அணியில் ஒரு அணிலைப் போல அமமுக செயல்படும்.இயக்கம் அரம்பிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளில் 75 ஆண்டுகளாக உள்ள கட்சிக்கும். 50 ஆண்டுகளாக உள்ள கட்சிக்கும் இணையாக அனைத்து பகுதிகளிலும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். ஆர் கே நகர் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனாலும் 2017-ல் ஜெயலலிதாவின் உண்மையான இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான்.

உலகத்திற்கு உணர்த்துகின்ற விதமாக லட்சோப லட்சம் தொண்டர்கள் என்னுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். யாரோ ஒரு சிலர் சுயநலத்திற்காக சுய லாபத்திற்காக விலகிப் போய் இருக்கலாம். ஆனால் லட்சோப லட்சம் தொண்டர்கள் கொண்ட கொள்கைக்காக லட்சியத்திற்காக ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்கும் வரை ஓய மாட்டோம் உறங்க மாட்டோம் என என்னோடு தோள் கொடுத்து பயணித்து வருகிறீர்கள்.நம்மிடம் பொறுப்பு பெற்றவர்கள் அந்தப் பொறுப்பை விலை பேசி விற்று விட்டு வேறு இடத்திற்குச் சென்று அங்கு இருக்கும் இடம் தெரியாமல் ஆகிவிட்டார்கள். நம்மோடு பயணிப்பவர்கள் உறுதியாக லட்சியத்திற்காக வெற்றி பெறப் போகிறோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இரட்டை இலை சின்னம் பழனிச்சாமி கைகளுக்கு வந்த பிறகு பலவீனம் அடைந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. பாராளுமன்றத் தேர்தலில் பன்னீர் செல்வம் தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்தது. கோடிக்கணக்கில் செலவு செய்தும் வெற்றி பெற முடியவில்லை என்பது உண்மை.ஜெயலலிதாவின் ஆட்சி அவர்களால் தொடர்ந்து தமிழ்நாட்டில் உருவாக்க முடியவில்லை. பழனிச்சாமி அவரைச் சேர்ந்த சுயநல கும்பலும் பதவி வெறியால் பணத் திமிர் தான் அவர்களும் விழ்வதற்க்கு காரணம்.

ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திய நம்மை வெளியேற்றினார். ஆட்சி தொடர்வதற்க்கு காரணமாக இருந்த பன்னீர்செல்வத்தையும் வெளியேற்றி விட்டார். எல்லோருடைய முதுகிலும் குத்தியவர். நான்கான்டு ஆட்சி தொடர்வதற்கு இரட்டை இலை அவர்களிடமே இருப்பதற்கும் காரணமானவர் என்பது தெரியும். அவர்களையும் முதுகிலே குத்தி விட்டார்.பழனிச்சாமிக்கு தெரிந்தது துரோகம் மட்டுமே. காலம் மாறி பழனிச்சாமி வீழ்ச்சி தொடங்கி விட்டது. பாராளுமன்றத் தேர்தலில் பழனிச்சாமியின் உண்மையான சுயரூபம் தெரியவரும். வருகின்ற தேர்தலில் துரோகத்திற்கு பதிலடியாக தக்க தண்டனை மக்கள் வழங்குவார் என்று டிடிவி தினகரன் பேசினார்.இதில் மாற்று கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கோபி நன்றி கூறினார்.