பதிவு:2024-01-24 18:37:05
தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரியபாளையம் அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரியபாளையம் அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, பரம்பரை அறங்காவலர் லோகமித்ரா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.