பதிவு:2022-05-11 12:43:18
திருவள்ளூர் அருகே மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் 2 பசுமாடு, ஒரு காளை மாடு, ஒரு கன்றுக்குட்டி பலி :
திருவள்ளூர் மே 11 : திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக சூறாவளி காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருவள்ளூர் அடுத்த கல்யாண குப்பம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.இது குறித்து கிராம மக்கள் மின்வாரிய ஊழியர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் விவசாயக் கூலித் தொழிலாளர்களான பழனி, வாசு, மனோகரன் ஆறுமுகம் ஆகியோர் தங்களது மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளனர். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள், ஒரு கன்றுகுட்டி, ஒரு காளை மாடு ஆகிய 4 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்ய மின்வாரிய ஊழியர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத அலட்சியத்தால் 4 மாடுகள் பலியான சம்பவம் கல்யாணகு்பபம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.