பதிவு:2024-01-31 13:18:18
கும்மிடிப்பூண்டி அருகே 200 குடும்பங்களை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியதை அடுத்து கால அவகாசம், வீட்டுமனை கேட்டு கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு :
திருவள்ளூர் ஜன 30 : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர் பகுதியில் சுமார் 3,000 மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக ரயில் நிலையம் ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள கடைகள் வீடுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை காலி செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே நிர்வாகமும் வருவாய்த் துறையினரும் நோட்டீஸ் வாங்கிய நிலையில் நாளை மறுநாள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினர் மற்றும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அப்பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி சட்டமன்ற உறுப்பினர் வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை கோரிக்கை வைத்தும் இதுவரை செவி சாய்க்க வில்லை.
மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் கேட்டும். உடனடியாக வீட்டுமனை பட்டா வேறு இடத்தில் வழங்க கோரியும் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் திருவள்ளூர் ஆட்சியர் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.