திருவள்ளூர் மாவட்ட அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் :

பதிவு:2024-01-31 13:20:08



திருவள்ளூர் மாவட்ட அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் :

திருவள்ளூர் மாவட்ட அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் :

திருவள்ளூர் ஜன 30 : இந்தியா முழுவதும் சாலை விபத்துகளால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது ஆனால் விபத்தை ஏற்படுத்தும் வாகனங்களோ, ஓட்டுனர்களோ, அதன் உரிமையாளர்களோ பெருமளவில் தண்டனை கிடைக்காமல் தப்பித்துவிடுவதாக கூறி மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாகிவிடும் ஓட்டுனர்களை தண்டிக்கும் வகையில் மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஹிட் அன்ட் ரன் என்ற புதிய சட்டத்தின் படி விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாகும் ஓட்டுனர் ரூ.7 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். இல்லையேல் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்பது அந்த சட்டமாகும்.

எனவே இந்த சட்டத்தை திரும்பப் பெற கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே திருவள்ளூர் மாவட்ட அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திருவள்ளூர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் காஞ்சிப்பாடி பி.சரவணன் தலைமை தாங்கினார். இதில் டிப்பர் லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுனர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தின் போது மத்திய அரசின் இந்த சட்டத்தால் ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதற்கு வருவதில்லை. வெளியூர் அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது அங்குள்ள காவல் நிலையம், மருத்துவமனையில் தகவல் தெரிவிக்க வேண்டும். நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என சொல்கிறார்கள். இதனால் ஓட்டுனர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விபத்தை ஏற்படுத்திய டிரைவரை அடிக்கிறார்கள். அதனாலேயே டிரைவர்கள் தலைமறைவாக வேண்டிய நிலை உள்ளது. வேண்டுமென்றே யாரும் விபத்தை ஏற்படுத்துவதில்லை.

எனவே மத்திய அரசு இந்த ஹிட் அன்ட் ரன் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இந்த சட்டத்தால் பெட்ரோல் டாங்கர் லாரி, டீசல் டாங்கர் லாரி போன்ற அனைத்து முக்கிய வாகனங்களும் ஓடாத நிலை ஏற்படும். இதனால் கட்டுமானத் தொழில்கள் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு இந்த ஹிட் அன்ட் ரன் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லையேல் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் மண் குவாரிகளை திறக்க வேண்டும். புறவழிச்சாலை ஏற்படுத்தினால் விபத்துகள் குறையும் என்றும் தெரிவித்தனர்.